எல்லையில் ஊடுருவ முயற்சி: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

  Newstm News Desk   | Last Modified : 10 Jun, 2018 11:09 pm

6-militants-killed-after-trying-to-breach-loc

ஜம்மு காஷ்மீரில் இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. 

காஷ்மீரின் கேரன் பகுதியில், எல்லை வழியாக இன்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் பலி  என்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கண்ணா, கேரன் பகுதியில் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியை தாண்ட தீவிரவாதிகள் முயற்சி செய்த போது, பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது என்றார்.

தீவிரவாதிகளை இன்னும் அடையாளம் காணவில்லை என்றும், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரம்ஜான் மாதம் என்பதால், நோன்பு சமயம் காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என கூறி ராணுவத்தின் செயல்பாடுகளை குறைத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தீவிரவாத ஊடுருவல்கள் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close