நிபா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வந்தது: கேரள அரசு

  Newstm News Desk   | Last Modified : 11 Jun, 2018 06:44 am

nipa-virus-contained-claims-kerala-govt

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று தாக்கி 16 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், கேரள மாநிலத்தின் கோழிக்கூடு பகுதியில், நிபா என்ற வைரஸ் தொற்று தாக்கி பலர் பாதிக்கப்பட்டனர். கோழிக்கூடு பகுதியில் மட்டும் 13 பேர் இந்த வைரஸ் தாக்கியதில் உயிரிழந்தனர். அருகே உள்ள மலப்புரத்தில் 3 பேர் இறந்தனர். கேரளாவில் பரவி வந்த நிபா, மற்ற மாநிலங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு பிறகு, தற்போது நிபா வைரஸ் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 2000 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். வைரஸ் தாக்கிய 2 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் தற்போது முழுவதும் குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

"நிபா வைரஸ் தாக்கிய இரண்டு நோயாளிகளை பார்த்தோம். அவர்கள் பரிபூரண குணமடைந்து விட்டார்கள். இது மிகவும் அரிது. மேலும் பலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வேறு யாருக்கும் புதிதாக நோய் இருப்பதாக தகவல்கள் கிடைக்காததால், வைரஸ் பரவுவது நின்றுவிட்டது என கருதுகிறோம்" என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.

கோழிக்கூட்டில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் இயல்வு நிலை திரும்பும் என கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close