கர்நாடகா ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 09:25 am

voting-starts-in-jayanagar-assembly-karnataka

கர்நாடகாவில் ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில்  கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைப்பெற்றது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை பிடித்தது. அதன்பின்னர் கடந்த மே 25ம் தேதி ஆர்.ஆர். நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதை காங்கிரஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜெயநகர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும். இதற்காக 216 வாக்குச்சாவடி மையங்கள் செயப்படுகின்றன. அதிகாலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்தனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.