பா.ஜ.கவை தோற்கடிக்க பகுஜன் சமாஜுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்கத் தயார்: அகிலேஷ்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 01:18 pm
akhilesh-yadav-ready-to-give-few-seats-to-bsp-and-in-2019-election-to-continue-alliance-with-the-party

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க, பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் அளிக்கத் தயார் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

2019ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலானது நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணியைத் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜகவும், விட்ட ஆட்சியினை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸும் செயல்பட, இவை அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் மற்ற மாநில கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. 

சமீபத்தில் உ.பியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நூர்பூர் தொகுதியில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியுடன், சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஒருவர், "இந்த கூட்டணி அதிக நாட்களுக்கு இருக்காது" என்றபடி பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பெவார் பகுதியில் நடந்த ஒரு விழாவில் பேசிய அகிலேஷ் யாதவ், "2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி தொடரும். கூடுதல் இடங்களை அந்த கட்சி கேட்கும் பட்சத்தில் அதை வழங்கவும் தயார். பா.ஜ.கவை தோற்படிப்பதே எண்களின் முக்கிய நோக்கம். இந்த கூட்டணியின் மூலமாக பா.ஜ.க பெரும் பின்னடைவை சந்திக்க இருக்கிறது" என தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close