கோரக்பூர் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர் கபீலின் சகோதரர் மீது தாக்குதல்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 01:58 pm
brother-of-doctor-blamed-for-child-deaths-shot-at-near-yogi-adityanath-home

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தன் சொந்த முயற்சியில் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் மீது நேற்று மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

கடந்த ஆண்டு கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் வரையில் உயிரிழந்தன. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து பணம் கொடுக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தியது.

இந்த சம்பவத்தின் போது, மருத்துவர் கஃபீல் கான் தனது சொந்த முயற்சியில், சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி தன்னால் முடிந்த அளவிலான குழந்தைகளை காப்பாற்றினார். அவரது செயல் இந்திய மக்கள் தரப்பி பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் அவர், "ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை" என்று கூறி காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். அவரது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. கடைசியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. 8 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு மருத்துவர் கஃபீல் கானின் சகோதரரை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். கோரக்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த அவர் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அவரது கை, கழுத்து மற்றும் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்,  இதுகுறித்து பேசிய மருத்துவர் கஃபீல், "இந்த சம்பவத்தினால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். என்னுடைய சகோதரரை நேற்று ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, காவல்துறையினர் தடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அதன்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அங்குள்ள மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிக நேரம் செலவழிந்தது" என்றார். 

தற்போது கஃபீல் சகோதரர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் பாய்ந்த குண்டுகள் அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப்பட்டு விட்டன என மருத்துவர்கள் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close