முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 01:51 pm

former-prime-minister-vajpayee-hospitalised-taken-to-aiims

முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பா.ஜ.கவின் மூத்த தலைவரும், இந்தியாவின் 10வது பிரதமருமான வாஜ்பாய் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் மேற்பார்வையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. ரன்தீப் குலேரியா தான் கடந்த 30 ஆண்டுகளாக வாஜ்பாய்யின் தனிப்பட்ட மருத்துவராக இருந்து வருகிறார்.

2009ம் ஆண்டு ஏற்பட்ட மாரடைப்புக்கு பிறகு வாஜ்பாயால் சரியாக பேச முடியாமல் போனது. அதன் பின் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டார். மேலும் நீண்ட நாட்களாக அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close