16 வயதில் பொறியியில் படிப்பு முடித்த இளம் பெண்

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 06:38 pm
16-year-old-kasibhatta-samhitha-is-telangana-s-youngest-engineer

மின்சார துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த இளம் பெண் ஒருவர், 16 வயதில் தெலங்கானாவின் இளம் பொறியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சம்ஹிதா சாதாரண மாணவர்களை போல் இல்லாமல் சற்று அதிக திறமையுள்ளவராக இருந்துள்ளார். அதாவது  3 வயதில் தலைநகரங்களை பெயரைச் சொல்வதுடன், 200 நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டினார். அவரின் இந்த அபரிமிதமான திறமையை கொண்டுள்ள சம்ஹிதா, நான்கு வயதிலேயே நான்காம் வகுப்பு முடித்து, 10 வயதிற்குள்ளாகவே 10ம் வகுப்பை முடித்துவிட்டார்.

இதனையடுத்து பொறியியல் படிப்பில் சேர அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தன் 12வது வயதில் இணைந்தார். தற்போது தெலங்கானா அரசின் உதவியுடன் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளர் படிப்பை முடித்திருக்கிறார் சம்ஹிதா. அரசு அனுமதி வழங்கினால், மேற்கொண்டு எம்.டெக் படிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மின் துறையில் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பை முடித்ததாக சம்ஹிதா தெரிவித்துள்ளார். தற்போது தெலங்கானாவின் இளம் பொறியாளராக ஜொலிக்கிறார் சம்ஹிதா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close