காங்கிரஸின் இஃப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜிக்கு கல்தா

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 06:58 pm
pranab-not-invited-to-congress-s-iftar-party

காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூன் 13ம்தேதி நடைபெற உள்ள இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ள பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். கட்சியினர் முதல் குடும்பத்தினர் வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
அங்கு அவர் தேசியம் குறித்தும் இந்திய நாட்டின் தனிதன்மை குறித்தும் பேசினார். அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார் கூட பிரணாப்பின் உரைக்கு வரவேற்பு தெரிவித்தனர். 

அதன்பின்னர் பா.ஜ.க அடுத்த தேர்தலில் மோடிக்கு பதிலாக பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது சிவசேனா கட்சி. இதற்கு பதிலளித்த பிரணாப்பின் மகள், தனது தந்தைக்கு முழு நேர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. அவரை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றார். 

இந்நிலையில் இந்த வாரம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ள பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் அக்கட்சியின் துணை தலைவர் ஹமித் அன்சாரிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 

இந்த ஆண்டில் முன்னதாக சோனியா ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் தான் இந்த விருந்துக்கும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விருந்து நாளை மறுநாள் டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் நடைபெற உள்ளது.

2 நாட்களே உள்ள நிலையில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளால் தங்களது முக்கிய உறுப்பினர்கள் வரமுடியாத பட்சத்தில் கட்சியின் சார்பில் ஒருவரை அனுப்ப காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close