ஆத்திரத்தில் ஹெச்.ஆரை சுட்ட முன்னாள் தொழிலாளி

  திஷா   | Last Modified : 12 Jun, 2018 11:03 am

employee-shoots-company-s-hr-head

வேலை செய்யும் நிறுவனங்களில் பிரச்னைகள் ஏற்படுவது பொதுவான ஒன்று. இதை சிலர் லாவகமாக கையாள்வார்கள், இன்னும் சிலர் எதற்கு இந்த தலைவலி என்று வேலையை விட்டு விட்டு, அடுத்த நிறுவனத்தை நோக்கி நகர்வார்கள். 

ஆனால், இதில் வெகு சிலர் மட்டும் கோபத்தின் உச்சத்திற்கு சென்று பழி தீர்க்க முயல்வார்கள். அப்படிப்பட்ட சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது. குர்கானில் உள்ள ஜப்பானிய நிறுவனமான, மிட்சுபிஷி நிறுவனத்தில் ஹெ.ஆர் பிரிவின்  தலைமை அதிகாரியாக  இருப்பவர் பினேஷ் சர்மா. 

இவர் அலுவலகத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியைக் காட்டி, காரை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனால் நிறுத்தாமல் சென்றார் பினேஷ். இதனால் பைக்கில் வந்தவர்கள் 2 முறை சுட்டு இருக்கிறார்கள். சாலையில் பய்ணித்துக் கொண்டிருந்தவர்கள் பினேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

குற்றவாளிகள் இருவரில் ஒருவர் மிட்சுபிஷி நிறுவனத்தில் பணியாற்றிய ஜொகிந்தர். முறைகேடு நடத்தை காரணமாக  நேற்று அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close