ஓட்டுக்கு பிச்சை எடுப்பவர்கள் தான் இப்தார் விருந்து வைக்கிறார்கள்: பா.ஜ.க எம்.எல்.ஏ

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 03:04 am
telungana-bjp-mla-s-comment-on-political-parties-hosting-iftar-party

ஓட்டுக்கு பிச்சை எடுப்பவர்கள் தான் இப்தார் விருந்து வைக்கிறார்கள் என்று தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் கொஷமஹால் தொகுதி எம்.எல்.ஏ டி.ராஜா சிங் லோத். இவர் சமீபத்தில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த மட்டும் முயற்சிக்கிறார் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள் தான் இப்தார் விருந்து வைக்கிறார்கள். மேலும் 'பச்சை புத்தகம்' நமது நாட்டில் தீவிரவாதத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறது. அதற்கு தடைவிதிக்க வேண்டும். நான் எப்போதும் இப்தார் விருந்து வைக்கவோ, அழைப்பு வந்தால் அதில் கலந்து கொள்ளவோ மாட்டேன். 

இப்போது நிறைய தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து செல்ஃபி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் மதம் மற்ற மதத்தினரை கொலை செய்ய சொல்கிறது. இந்து மதம் அனைவரையும் மதிக்க சொல்கிறது. என்னால் எப்படி இந்துக்களை கொல்ல நினைப்பவர்களின் விருந்துக்கு செல்ல முடியும்" என்றார். 

மேலும், "என்னுடைய கனவெல்லாம் அகண்ட இந்து பாரதம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, மாட்டிறைச்சிக்கு தடை ஆகியவை தான். உலகம் முழுவதும் 50 முஸ்லீம் நாடுகளும், 100 கிருஸ்துவ நாடுகளும் இருக்கும் போது ஒரு இந்து நாடு இருந்தால் என்ன?" என்றார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close