பிரதமர் மோடியும், யோகியுமே ஊழல் செய்யாதவர்கள்- பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jun, 2018 03:05 am
certain-about-pm-modi-adityanath-s-honesty-not-others-bjp-mp

பாஜகவில் பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மட்டுமே ஊழல் செய்யாதவர்களாக உள்ளனர் எம்.பி. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் நேற்று கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கைசர்கஞ்ச் மக்களவை பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண், எங்களது கட்சியில் பிரதமர் மோடியும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மட்டுமே ஊழல் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் கட்சியில் உள்ள மற்றவர்கள் குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது என பேசினார். எம்.பியின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் உத்திரபிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு பதிலளித்த சரண், பாலியல் வன்கொடுமைக்கு பெற்றோர்கள் இளைஞர்களை சரியாக வளர்க்காததே காரணம். தேவையில்லாமல் பையன்களுக்கு சுதந்திரம் தருவதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு வித்தாக அமைகிறது” என கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close