ஆம்புலன்ஸ் இல்லாததால் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jun, 2018 03:06 am

udaipur-family-alleges-ambulance-did-not-reach-on-time-they-had-to-take-a-pregnant-woman-on-a-motorbike-as-a-result-she-delivered-on-the-road

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பழங்குடியின பெண் ஒருவர் சாலையிலே குழந்தையை பெற்றெடுத்த அவலம் அரங்கேறியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அந்த பெண்ணின் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலே அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு சாலையிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் மீட்கப்பட்ட அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆம்புலன்ஸ் வராததால் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை கிராம மக்கள் தூளியில் 3 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடதக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close