வாஜ்பாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 10:24 pm
pm-modi-visits-vajpayee-in-aiims-hospital

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்தார். 

வழக்கமான பரிசோதனைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால், பின்பு அவர் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயை சந்தித்தனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடியும் மருத்துவமனைக்கு சென்றார். 

மருத்துவமனையில் அவர்கள் வாஜ்பாயை பார்க்க அனுமதிக்கப்பட்டனரா என உறுதியான தகவல்கள் இல்லை. வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவர் நலமாக இருப்பதாக அவரின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close