கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்வா முக்கிய பிரமுகருக்கு தொடர்பு?

  Newstm News Desk   | Last Modified : 12 Jun, 2018 03:07 am

gauri-lankesh-murder-accused-names-hindutva-leader

கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நவீன் குமார், இந்து ஜன்ஜக்ருதி சமிதியின் செய்தித் தொடர்பாளர் மோகன் கௌடாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு கன்னட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், பெங்களூரில் அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை பற்றி விசாரிக்க சிறப்பு கமிஷனை கர்நாடக அரசு நியமித்தது. தனது பத்திரிகை மூலம் வலதுசாரி அமைப்புகளை தாக்கி எழுதி வந்த கௌரி லங்கேஷை, அது போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, இந்து யுவ சேனா என்ற அமைப்பை சேர்ந்த நவீன் குமார் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சனதன் சன்ஸ்கா என்ற இந்து ஜன்ஜக்ருதி சமிதியின் கிளை அமைப்பின் சிலர் இந்த கொலையை திட்டமிட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக, இந்த இரு அமைப்புகளையும் சேர்ந்த 4 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். நவீன் குமார் கொடுத்த வாக்குமூலத்தில், கர்நாடக இந்து ஜன்ஜக்ருதி சமிதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மோகன் கௌடா தான் தன்னை கடந்த வாரம் கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மோகன் கௌடா, இது போலீசார் செய்யும் சதி என்று குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் பத்திரிகையாளர்களை அழைத்து ஜன்ஜக்ருதி சமிதியின் சார்பில் பதிலளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close