கோகோ கோலாவை தொடங்கியது யார் தெரியுமா? - டிரெண்டாகும் ராகுல் கருத்து

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 10:35 am

according-to-rahul-gandhi-trending-in-twitter

எலுமிச்சை சாறு விற்றவர் தான் கோகோ கோலா நிறுவனத்தை ஆரம்பித்தார் என காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்தை ட்விட்டர்வாசிகள் கிண்டல் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். 

2019 தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தற்போதில் இருந்தே தேர்தலுக்கான முன்னெடுப்புகளை தொடங்கி விட்டனர். இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் கூறிய கருத்து ட்விட்டர் வாசிகளுக்கு பேசு பொருளாகி உள்ளது. அவர், "கோகோ கோலா நிறுவனத்தை ஆரம்பித்தவர், ஆரம்ப காலத்தில் எலுமிச்சை சாறு விற்பவராக இருந்தார். அவர் அமெரிக்காவில் எலுமிச்சை சாறு விற்றுக்கொண்டு இருந்தபோது அவரது திறமையை அங்கு அனைவரும் மதித்தனர். பிரபல மெக் டொனல்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கியவர் சாலையோர கடை வைத்திருந்தார். 

தற்போது ஆட்டோ மொபைல் துறையில் கொடிக்கட்டி பறப்பவர்கள் முன்னதாக மெக்கானிக்காக இருந்தவர்கள். இது போன்று இந்தியாவில் ஒருவரை காட்டுங்கள்" என்றார். 

உண்மையில் கோகோ கோலா நிறுவனத்தை தொடங்கியவர் ஒரு மருத்துவர். இதனால் ராகுல்காந்தியின் இந்த பேச்சு தற்போது ட்விட்டரில் #AccordingToRahulGandhi என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் ராகுலின் பேச்சுக்கு பிறகு சிலர் கோலா நிறுவனத்தை தொடங்கியவர் பற்றி விக்கிபீடியா பக்கத்தில் "அவர் காந்தி குடும்பத்தோடு சேர்ந்து எலுமிச்சை சாறு விற்றுக்கொண்டு இருந்தார்" என்ற தகவலை இணைத்தனர். ஆனால் அது சில மணி நேரத்திற்கு பிறகு நீக்கப்பட்டது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close