காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; இரண்டு போலீசார் வீரமரணம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 11:48 am
2-cops-dead-10-soldiers-injured-in-separate-attacks-in-jammu-and-kashmir

காஷ்மீர் எல்லையில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குலாம் ரசூல், குலாம் ஹாசன் என்ற இரண்டு போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 சிஆர்பிஃஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

ரம்ஜான் பண்டிகையையொட்டி, இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துமாறு இந்திய தரப்பில் எச்சரிக்கை கொடுத்தும், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 44 முறை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close