நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 03:22 pm

neet-likely-to-go-in-online-from-next-year-national-testing-agency-to-conduct-the-exam

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வினை இனி சி.பி.எஸ்.இ நடத்தாது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இந்தியா முழுவதும் பொதுவாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மே 6ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கன முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. ஆனால் இந்தத்தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும் சில குழப்பங்கள் நீடித்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இனி நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தாது எனவும், அதற்கு பதிலாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்படும் 'நேஷனல் டெஸ்ட் ஏஜென்சி'(National Test Agency) என்ற அமைப்பு இந்தத் தேர்வுகளை நடத்தும். இந்த அமைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்வை ஆன்லைனில் நடத்தவும், ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close