கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் 6வது நபர் கைது

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 08:32 am

6th-suspect-arrested-in-gauri-lankesh-murder-case

கன்னட பத்திரிகையாளர் கௌரி லக்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மாரே, கௌரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்ட முக்கிய குற்றவாளியென தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஆண்டு கன்னட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வலதுசாரி அமைப்புகளுக்கு தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 26 வயதான பரசுராம் வாக்மாரேவை சிறப்பு புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. வாக்மாரேவை 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள பரசுராம் பற்றி பேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் பிகே சிங், பரசுராம் தான் கௌரி லங்கேஷை சுட்டதா என்பது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். "இதுவரை அதுபோன்ற எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. விசாரணை முழுவதும் முடியாததால், இந்த சம்பவத்தில் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது" என கூறினர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close