‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 உயர்வு!

  சுஜாதா   | Last Modified : 13 Jun, 2018 06:33 am

atal-pension-yojana-apy-limit-could-be-increased-to-rs-10-000

‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5000ல்  இருந்து ரூ.10,000மாக  உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசால் 2015–ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்தில் சந்தாதாராக இணையும் நபருக்கு அவரின் 60 வயதுக்கு பின்பு  மாதாந்திர ஓய்வூதியமாக 1000 ரூபாய் முதல் ரூ.5000 வரை கிடைக்க தொடங்க திட்டமாகும். இந்த திட்டத்தில் இது வரை  1.02 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.

 அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பண மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இன்னும் 20 றகு இந்த தொகை போதுமானதாக இருக்காது என்பதால் இது குறித்து பரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதுபற்றி ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பெட்ரா) தலைவர் ஹேமந்த் ஜி.கான்டிராக்டர் கூறுகையில், ‘‘அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5000ல்  இருந்து ரூ.10,000மாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரையை நிதி அமைச்சசத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதே சமயம்  ‘அடல் பென்சன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது.’’ என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close