ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 08:36 am

centre-discussing-about-linking-driving-license-with-aadhaar

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கி மற்றும் வருமான வரி கணக்கு எண் ஆகியவற்றைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது பற்றி நிதின் கட்கரியுடன் பேசி வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், ஆதாருடன் உரிமத்தை இணைப்பதால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை பிடிக்க முடியும் என்று கூறினார். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் கொலை செய்து விட்டு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தப்பிச் செல்லும் ஒருவர், இனி பிடிபட்டு விடுவார் என்றார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றி கொள்ளலாம் ஆனால் அவரது கைரேகையை மாற்ற முடியாது என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.