காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; 4 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 04:57 pm
officer-among-4-bsf-personnel-killed-in-pak-rangers-firing

காஷ்மீர் எல்லையில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் சாம்பா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் உள்நுழைந்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் இந்திய வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தரப்பிலும் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் வீர மரணமடைந்தனர். இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு துணை கமெண்டன்ட் அடங்குவர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close