எக்ஸாம் எழுதி பாஸ் செய்தால்தான் பதவி உயர்வு... பேராசிரியர்களுக்கு புதிய விதிமுறை

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Jun, 2018 07:01 am
human-resource-development-hrd-ministry-has-notified-that-ph-d-will-be-mandatory-for-the-direct-recruitment-of-assistant-professors-in-indian-universities

கல்லூரி பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான பழைய முறையை முற்றிலும் நீக்கி, புதிய நடைமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது உள்ள விதிமுறைப்படி, பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற ஆராய்ச்சி நூல்களை வெளியிட வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி பேராசிரியர்களின் பதவி உயர்வுக்கு அதற்கான தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் இனி ஆராய்ச்சி செய்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கான இந்த புதிய நடைமுறை 2021ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மத்திய மனதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close