வாஜ்பாய் விரைவில் முழுவதும் குணமடைவார்: எய்ம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 05:02 am
vajpayee-will-recover-completely-in-few-days-aiims

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த திங்களன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் வழக்கமான சோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர், சிறுநீரக பிரச்னை இருப்பதால் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்தது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்ட பலர் தலைவர்கள் வாஜ்பாயை சந்திக்க மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். இதனால், அடிக்கடி அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. 

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை, வாஜ்பாய் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தொடர் சிகிச்சையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாகவும்,  விரைவில் முழுவதும் குணமடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close