ரூ.6000 கோடிக்கு 6 ஹெலிகாப்டர்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்!!

  சுஜாதா   | Last Modified : 14 Jun, 2018 05:40 am

us-approves-sale-of-6-more-apache-helicopters-to-india

ராணுவ தாக்குதலில் பல்வேறு சாகசங்களை  புரிந்து வரும் ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்திய அரசு விரும்பியது. அதன் அடிப்படையில்  6 அப்பச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

இது குறித்து ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிர்வாகம் ‘வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை’ என்ற அடிப்படையில் 930 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) 6 ஏ.எச்-64இ அப்பச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 'அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தாலும், சர்வதேச படைகளாலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றை பயன்படுத்துவதிலோ, தனது ராணுவத்தில் சேர்ப்பதிலோ இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போவதில்லை. தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளவும், பிராந்திய அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்தியாவுக்கு இது வலிமையை அளிக்கும். தனது படைகளை நவீனமயமாக்குவதற்கும் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close