அடிக்கடி லீவ் எடுக்கிறார்.. மோடி மீது ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்.பி புகார்

  Newstm News Desk   | Last Modified : 14 Jun, 2018 08:45 am

aap-mp-filed-case-against-modi-regarding-pm-s-parl-absenteeism

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி 19 முறை தான் நாடாளுமன்றத்திற்கு வந்தார் என்று ஆம் ஆத்மி எம்.பி உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து அந்த ஆண்டு மே 26ந்தேதி மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைந்துள்ளன. இந்த 4 ஆண்டுகளில் அவர் 19 முறை தான் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார் என்னும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்க தொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆம்ஆத்மி சார்பில் கூறப்படுவதாவது: ‘’இந்த 4 ஆண்டுகளில் பல முறை நாடாளுமன்ற கூட்டம் நடந்துள்ளது. அதில் பிரதமர் 19 முறைதான் கலந்து கொண்டுள்ளார். மேலும் முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றத்திற்கு வரவேயில்லை.

வந்த சமயங்களிலும் அவர் பல முறை பேசாமல் தான் இருந்துள்ளார். 6 முறை திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, சில முறை அமைச்சர்களை அறிமுகப்படுத்தவும், 2 முறை காங்கிரஸ், நேரு பற்றி குற்றச்சாட்டு வைக்கவும் பேசியுள்ளார். நாடாளுமன்றம் நடந்த நாட்களில் அவர் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துள்ளார். மேலும் 800 இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளார்” என்றனர்.

பிரதமர் மோடிடிதான் இந்திய பிரதமர்களில் மிகவும் குறைவான நாட்கள் பாராளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close