குப்பையுடன் குப்பையாக கிடந்த ஆதார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Jun, 2018 05:59 am

5000-aadhar-cards-found-at-scrap-dealer-s-shop-in-jaipur

ராஜஸ்தானில் உள்ள பழைய பேப்பர் எடைக்கு போடும் கடையில் குப்பையுடன் குப்பையாக சுமார் 5000 ஆதார் அட்டைகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கணக்குகள், பான் கார்டு, ஓய்வூதியம், செல்போன் சேவை, ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம் என அனைத்து இன்றியமையா தேவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்ட ஆதார் அட்டை, ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜலோபுரா பகுதியில் பழைய பேப்பர் கடையில் செய்திதாள்களுடன் குப்பையுடன் குப்பையாக இருக்கிறது. 

இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் இம்ரான், “காலையில் ஒருசிலர் வந்து பழைய பேப்பர்களை போட்டுவிட்டு சென்றனர். அந்த பேப்பர்களுக்கு இடையே 5000 ஆதார் கார்டுகளும் இருந்தது. இதைப்பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் உறைந்தேன். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீஸார் விரைந்து வந்து என் கடையை முழுவதுமாக சோதனையிட்டு அங்கிருந்த ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்” என கூறினார். 

ஆதாரை கைப்பற்றிய போலீஸார்க் கூறுகையில்,  “அப்பகுதி மக்களுக்கு சென்று சேரவேண்டிய ஆதார் அட்டைகள் தபால் அலுவலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. அவைதானா இவை என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close