காஷ்மீர்: மூத்த பத்திரிகையாளர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

  Newstm News Desk   | Last Modified : 14 Jun, 2018 10:54 pm

journalist-shot-dead-by-militants-in-kashmir

ஜம்மு காஷ்மீரில் பிரபல பத்திரிகையாளர் ஷுஜத் புகாரியை, அவரது அலுவலகத்தின் வெளியே தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் புகாரிக்கு, தலைநகர் ஸ்ரீநகரின் ரெசிடென்சி சாலையில் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் வெளியே இன்று திடீரென வந்த தீவிரவாதிகள், புகாரியை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் அவர், அவரது வாகன ஓட்டுநர், மற்றும் அலுவலக பாதுகாவலர் ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

புகாரி மற்றும் அவரது வாகன ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். பாதுகாவலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close