தண்ணீர் பஞ்சத்தால் 60 கோடி இந்தியர்கள் அவதி: நிட்டி ஆயோக் பகீர் ரிப்போர்ட்!

  Newstm News Desk   | Last Modified : 15 Jun, 2018 05:58 am

2-lakh-die-every-year-without-access-to-safe-water

மத்திய அரசின் ஆய்வு ஆணையமானநிட்டி ஆயோக், நாட்டின் சரித்திரத்திலேயே மிகவும் மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் எச்சரித்துள்ளது. 

60 கோடி இந்தியர்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தண்ணீர் பற்றாக்குறையாலும், பாதுகாப்பான குடிநீர் இல்லாமலும் இறப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2030ம் ஆண்டின் போது, மக்களின் தண்ணீர் தேவை, இருப்பை விட இரு மடங்கு அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுமாம்.

மாநில அரசுகள் உடனடியாக நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிட்டி ஆயோக் அறிவுறுத்தியுள்ளது. நீர்நிலைகளை சரியாக பயன்படுத்தும் மாநிலங்களில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close