காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 12:23 pm

soldier-abducted-from-jammu-and-kashmir-s-pulwama-shot-dead-by-terrorists

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடலை பாதுகாப்புப்படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். இன்று ராணுவ வீரர்கள் முன்னிலையில் குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் அவுரங்கசீப் என்ற ராணுவ வீரர் பணியாற்றி வந்தார், பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வந்த அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அவுரங்கசீப்பின் உடல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் தான் என்பது உறுதி செய்ய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அவரது உடலுக்கு குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close