டெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 03:17 pm
fifth-day-of-arvind-kejriwal-s-sit-in-protest-in-raj-niwas

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆளுநர் இல்லத்தில் 5வது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அரசின் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்துவதில் அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் தற்போது டெல்லி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகஸ் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதிக்கின்றனர் எனவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி முதல்வ அர்விந்த் கெஜ்ரிவால் அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தார்.

மேலும், ஆளுநரை சந்திக்கவும் கெஜ்ரிவால் நேரம் கேட்டார். அனுமதி மறுக்கப்படவே, அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகிய 4 பேரும் ஆளுநரின் இல்லத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5ம் நாளான இன்றும் முதல்வர் உள்பட நால்வரும் அங்கு தான் இருக்கின்றனர். இவர்களது இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாகரத்திற்கு தீர்வு சொல்ல வேண்டும்.கடந்த நான்கு நாட்களாக ராஜ் நிவாஸில் ஆளுநரை சந்திக்க காத்திருக்கிறோம். ஆனால் ஆளுநரோ, 4 நிமிடம் கூட எங்களுக்காக ஒதுக்குவதாக தெரியவில்லை" என்றார். மேலும் பலர் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், கெஜ்ரிவால் இதுகுறித்து பேசுகையில், "ஆளுநரை சந்திக்காமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம். தொடர்ந்து ஆளுநர் எங்களை சந்திக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close