வைரலாகும் தேவகவுடாவின் வொர்க் அவுட் ஸ்டில்ஸ்

  Newstm News Desk   | Last Modified : 15 Jun, 2018 02:26 pm

85-old-deve-gouda-s-yoga-pics-goes-viral

85 வயதாகும் முன்னாள் பிரதமர் தேவகவுடா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட்  அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அதனுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அவர் ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்தார். 

அதற்கு பதிலளித்த குமாரசாமி, "அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன், உடற்தகுதி அவசியம் என்பதை நான் ஆதரிக்கிறேன். இப்போது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஃபிட்னஸில் தான் அதிகமான அக்கறை எனக்குத் தேவை. அதற்கு உங்களுடைய ஆதரவும் தேவை" என்றார். 

குமாரசாமிக்கு சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அவரால் தற்போது பெரியளவில் உடற்பயிற்சி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் தேவ கவுடா உடற்பயிற்சி செய்யும் படத்தை இணையத்தில் பதிவேற்றி உள்ளனர். 

முன்னாள் பிரதமரான 86 வயதாகும் தேவ கவுடா 7 முறை எம்.எல்.ஏ-வாகவும், 7 முறை எம்.பியாகவும் இருந்தவர். இவர் தனது வீட்டில் ஜிம் போன்ற அமைப்பை வைத்திருக்கிறார். மேலும் கார்த்திக் என்ற பெர்சனல் டிரைனரின் உதவியுடன் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

இதுகுறித்து அவர் கூறும் போது, "பல வருடங்களாக நான் உடற்பயிற்சி செய்து வருகிறேன். எனக்கு குடி பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோ இல்லை. சாதாரண சைவ உணவை சாப்பிடுகிறேன்" என்றார். 

இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்பவர்கள், பிரதமர் மோடி குமாரசாமிக்கு ஃபிட்னஸ் சேல்ஞ்ச் விடுத்ததை விட தேவகவுடாவிற்கு சவால் விடுத்திருக்கலாம் என்று கூறிவருகின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.