வெளிநாடுவாழ் இந்தியர்கள் 7 நாட்களுக்குள் திருமணப்பதிவு செய்யவேண்டும்: மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 05:07 pm

nri-marriages-must-be-registered-within-a-week-says-central-govt

வெளிநாடுவாழ் இந்தியர்கள் 7 நாட்களுக்குள் தங்களது திருமணத்தை பதிவு செய்யவேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடந்த சில தினங்களுக்கு முன்பாக, "வெளிநாடு வாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் தங்களது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது" என அறிவித்திருந்தார். 48 மணி நேரத்தில் பதிவு செய்வது என்பது சில இக்கட்டான சூழ்நிலைகளில் சாத்தியமாகாது என புகார் எழுந்தது. இதையடுத்து இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மேனகா காந்தி உள்பட சில மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது திருமணத்தை ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்களுக்கு விசா, பாஸ்போர்ட் வழங்கப்படாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close