அக்பர் மாமன்னர் இல்லை - யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Jun, 2018 06:33 pm
maharana-pratap-was-greater-than-akbar-says-yogi-adityanath

அக்பர் மாமன்னர் அல்ல என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

16ஆம் நூற்றாண்டில், ராஜஸ்தானில் உள்ள மேவார் பகுதியை ஆண்ட ராஜபுத்திர அரசர் மகாராணா பிரதாப் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஐ.எம்.ஆர்.டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துக்கொண்டு பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,  “சுயமரியாதையுடன், வீரத்துடன் தமது கோட்டைகளை போரில் வென்றவர் ராஜபுத்திர அரசர் மகாராணா பிரதாப். இவர் தான் மாமன்னர். முகலாய பேரரசர் அக்பர் கிடையாது. வேறொரு மதத்தை சேர்ந்தவரையோ, அந்நிய நாட்டை சேர்ந்தவரையோ ஆட்சியாளராக ஏற்க மாட்டேன் என தைரியமாக அக்பரின் தூதுக்குழுவிடம் கூறியவர் மகாராணா பிரதாப். துணிவும் தைரியமும் நிறைந்த மகா ராணா பிரதாப்பின் சிறப்பை வரலாறு பேசும்” என பேசினார். 

முன்னதாக உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏவான சன்கீத் சோம், முகலாய பேரரசர்கள் துரோகிகள் எனவும் அவர்களின் பெயர்களை வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்... அதேபோல் மற்றோரு எம்.எல்.ஏ தாஜ்மஹாலை ராம் மஹால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகிகள் மத்தியில் டெலிகான்ஃபரன்ஸ் முறையில் பேசிய பிரதமர் மோடி, இதுபோன்ற கருத்துக்களை பொது வெளியில் தெரிவிக்கக் கூடாது. ஊடகங்கள் இதற்காக காத்திருக்கின்றன என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும்,  இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பா.ஜ.க-வினர் வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close