பீகாரில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: லாலு மகன் தேஜஸ்வி

  Newstm News Desk   | Last Modified : 15 Jun, 2018 10:29 pm

need-president-s-rule-in-bihar-former-deputy-cm-tejaswi

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் மற்றும் பீகார் எதிக்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், அம்மாநிலத்தில் நிதிஷ் குமார் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அவர் நிதிஷ் குமார் அரசை குற்றம் சாட்டியுள்ளார். முன்னர் நிதிஷ் குமாருடன்  கூட்டணி வைத்து அவருடன் துணை  முதல்வராக செயல்பட்டு வந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி, கடந்த வருடம் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். அப்போது, அவரை ராஜினாமா செய்ய முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியதை தொடர்ந்து கூட்டணி முறிந்தது. ஆனால்,  பாரதிய ஜனதா, நிதிஷ் குமார் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து, அவரது ஆட்சியை தக்க வைத்தது. 

அதன்பிறகு, நிதிஷ் குமார் ஆசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் தேஜஸ்வி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சாடியுள்ளார். காயா பகுதியில் ஒரு 45 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டிய அவர், நிதிஷ் குமாரின் ஆட்சியை கலைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

"ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியை கடுமையாக விமர்சித்த பாரதிய ஜனதா, தற்போது ஏன் அமைதியாக உள்ளது. இதுவே எங்கள் ஆட்சியாக இருந்தால் நிச்சயம் அமைதியாக இருக்க மாட்டார்கள்" என்றார் தேஜஸ்வி. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close