சத்தீஸ்கர் சுக்மா வனப்பகுதியில் மூன்று நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 08:18 am

three-naxals-gunned-down-by-security-forces-in-chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று நக்சல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டம் நக்சல்கள் ஊடுருவும் முக்கியப்பகுதியாக உளது. இந்தப்பகுதியில் நுழையும் நக்சல் தீவிரவாதிகளை விரட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், இங்கு சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலையில் சுக்மா வனப்பகுதியில் நக்சல்கள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து நக்சல்கள் இருக்கும் பகுதியை அறிந்த போலீசார் அங்கு அதிரடி தாக்குதலை நடத்தினர். இதில் மூன்று நக்சல் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.மேலும், அப்பகுதியில் துப்பாக்கிகள் உள்பட, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close