கெளரி லங்கேஷை பரசுராம் தான் கொலை செய்துள்ளார்; உறுதி செய்த சிறப்புப்படை

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 09:35 am
i-killed-gauri-lankesh-to-save-my-religion-waghmore-to-sit

பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மோர் தான் அவரை சுட்டுக்கொலை செய்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு செப் 5ம் தேதி மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படை(சிஐடி) விசாரித்து வருகிறது.  இதுவரை இந்த வழக்கில் 6 பேரை கைது செய்துள்ளது. மேலும், இதே துப்பாக்கியால் தான் பகுத்தறிவாளர்களான கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கலபுர்கி ஆகியோரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அந்த அதிகாரி கூறுகையில், "கெளரி லங்கேஷை அண்மையில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மோரேதான் சுட்டுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அதே கைத்துப்பாக்கியைக் கொண்டு தான் கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கலபுர்கி ஆகியோரையும் கொலை செய்திருக்கிறார்கள். தடய அறிவியல் ஆய்வுக்கூடத்தின் ஆய்வறிக்கையும் இதனை உறுதி செய்துள்ளது. தோட்டாவின் பின்புறத்தில் உள்ள அடையாளத்தை வைத்து தான் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கௌரி லஙகேஷை கொலை செய்யப்பட்ட அமைப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகுத்தறிவாளர் கே.எஸ்.பகவானை கொலை செய்த வழக்கிகைதானவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close