ஜூன் 20ல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 10:53 am
pm-modi-to-interact-with-farmers-across-india-over-video-call-on-june-20

பிரதமர் மோடி வருகிற ஜூன் 20ம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட இருக்கிறார். 

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். சமீபத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக இலவச சமையல் எரிவாயு இணைப்பு பயனாளிகளிடம்  பேசினார். தொடர்ந்து நேற்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் பேசினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. 

இதையடுத்து நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை பேணிப்பாதுகாக்கும் விவசாயிகளிடையே மோடி பேச இருக்கிறார்.  வேளாண்துறை வளர்ச்சி, வேளாண் திட்டங்கள், வளர்ச்சியை பெருக்குதல் உள்ளிட்டவை குறித்து வரும் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார். கிராமங்களில் உள்ள சுமார் 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகளை அவர் கேட்க இருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close