வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை...மாறாக ஸ்ரீநகரில் வன்முறை!

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 10:48 am
there-is-no-sweet-exchange-in-wagah-border-instead-riot-happening-in-srinagar

வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொள்வர். ஆனால் இன்று இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறவில்லை. மாறாக ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. 

இந்திய வட எல்லையான காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி தாக்குதல் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. இன்று காலை காஷ்மீரில் ரம்ஜான் தொழுகை அமைதியான முறையில் தான் நடைபெற்றது. தொழுகைக்கு பிறகு அங்கு வந்த சில இளைஞர்கள் கையில் பாகிஸ்தான் அமைப்பு கொடியுடன் வந்து கோஷமிட்டனர். தொடர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார், பிரிவினைவாத அமைப்பின் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மேலும் தடியடி நடத்தியும், கற்களை வீசியும் அவர்களை கலைக்க முற்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் இன்று பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close