பத்திரிகையாளர் படுகொலை: பாதுகாப்பு படை மீது தீவிராவாத குழுக்கள் விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 03:31 pm

hizbul-lashkar-blame-india-for-journalist-shujaat-bukhari-s-murder

காஷ்மீரில் 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு படைகளை பயங்கரவாத இயக்கங்கள் விமர்சனம் செய்துள்ளன.

காஷ்மீரிலிருந்து வெளியாகும் 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் தலைமை பத்திரிக்கை ஆசிரியர், ஷுஜாத் புகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில், பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாதுகாப்புப்படைகளை, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும்  லஷ்கர்-இ-தொய்பா இயக்கங்கள் விமர்சனம் செய்துள்ளது.

''காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளின் மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் அறிக்கை வெளியிட்ட நிலையில் பத்திரிக்கையாளர் ஷுகாத் புகாரி கொல்லப்பட்டு உள்ளார்'' என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் கூறியுள்ளது.

இதற்கிடையே லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் பத்திரிக்கையாளர் ஹுகாத் புகார் கொல்லப்பட்டதில் இந்திய முகமைகளின் சதி திட்டம் உள்ளது. சுதந்திரத்திற்காக போராடுபவர்களுக்கு எதிராகவும் இந்திய படைகள் எதிர்ப்பை கொண்டிருக்கிறது. அவர்களை எல்லாம் இந்தியப்படைகள் இலக்காக்கி தாக்குகிறது எனக் கூறியுள்ளது. பத்திரிக்கையாளர் ஹுகாத் புகாரி கொல்லப்பட்டது இந்திய முகமைகளின் தவறாகும், எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மூன்று பேரது புகைப்படத்தை காஷ்மீர் போலீஸ் வெளியிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டும் உள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close