காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 01:02 pm
soldier-killed-in-kashmir-naushera

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

இன்று ரம்ஜான் பண்டிகையன்றும் காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இன்று காலை தொழுகைக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் அவர்களை கட்டுப்படுத்த ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் போலீசாரின் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. மேலும் தீவிரவாதிகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொள்வர். ஆனால் இன்று இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close