மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! மனைவியை கொலை செய்த கொடூரம்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 17 Jun, 2018 01:12 am
rape-accused-father-slits-wife-s-throat-during-bail-hearing-in-assam-court

அசாம் மாநிலத்தில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மகளையே பாலியல் வன்கொமை செய்த தந்தை

அசாம் மாநிலம் திப்ருகரை சேர்ந்த பூர்ணா நஹர் தேகா என்பவர் அவரது சொந்த மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பூர்ணா மீது அவரது மனைவி ரிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாத சிறைவாசத்திற்கு பிறகு பூர்ணா கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்தார். இந்த வழக்கு மீ்ண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனால் வழக்கில் ஆஜராக அவரது மனைவி மற்றும் மகளும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

மனைவியை கொலை செய்த கணவன்!

பூர்ணாவும், ரிதாவும் நீதிமன்றத்தில் சந்தித்தனர். அப்போது ரிதா மீது கடும்கோபத்தில் இருந்த பூர்ணா, தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். உடனே மயங்கி கீழே விழுந்த ரிதா படுகாயமடைந்தார். நீதிமன்றத்தில் இருந்தவர்கள் ரிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது.

பொய் சொன்னதால் கழுத்தறுத்தேன் - பூர்ணா

பூர்ணாவை கைது செய்து விசாரித்த போலீசாரிடம்,  “நான் ஒரு அப்பாவி, என் மகளை நானே பாலியல் வன்கொடுமை செய்ததாக மனைவி என்மீது பொய் புகார் கொடுத்தார். இதனால் கடந்த 9 மாதம் சிறையில் மிகவும் கஷ்டப்பட்டேன். பொய் கூறி சிறையலடைத்த என் மனைவியின் மீது மிகுந்த கோபத்தில் இருந்த நான் பழி வாங்கவே கொலை செய்தேன்” என கூறினார். நீதிமன்ற வளாகத்திலே மனைவியை கணவன் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close