நிதி ஆயோக்: நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 08:58 am
pm-to-chair-fourth-niti-aayog-meet-today

நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

அடுத்த ஐந்தாண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் என்ற பெயரில் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது கூட்டம் டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றடைந்தார்.

இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல், தேசிய ஊட்டச்சத்து திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் சார்பில் நேரம் கோரப்பட்டுள்ளது. நேரம் கிடைத்தால் தமிழக திட்டங்கள் குறித்து, முதல்வர் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல காவிரி விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியும் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக டெல்லி சென்றுள்ள குமாரசாமி நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்திக்க உள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close