வாகா எல்லையில் பதற்றம்; ரம்ஜான் கொண்டாட்டங்கள் இல்லை

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 02:44 pm
no-sweets-exchanged-in-wagah-for-eid-celebration

இந்தியா பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே உள்ள பதற்றமான சூழ்நிலையால் இந்த ரம்ஜானுக்கு எல்லையில் ராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளவில்லை.

ரம்ஜானை முன்னிட்டு, எல்லையில் ராணுவத்தின் நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. பண்டிகை நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்ற காரணத்திற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்க இந்திய ராணுவம் கடந்த மாதம் ஒப்புக்கொண்டது. ஆனால், இதையெல்லாம் மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதமும் இதே போல நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகள் பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுபோன்ற சம்பவங்களால் இனிப்புகள் வழங்கவில்லை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close