இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை அடைவதே நோக்கம்: நிதி ஆயோக்கில் மோடி பேச்சு 

  Padmapriya   | Last Modified : 17 Jun, 2018 08:04 pm

challenge-before-government-is-to-take-growth-rate-to-double-digit-pm-modi-at-niti-aayog

இந்திய பொருளாதாரம் சவாலான இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை வரையறுக்கும் நிதி ஆயோக் ஆட்சிக் குழுவின் 4-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று  நடைபெற்றது. நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், முதல்வர்களும், துணைநிலை ஆளுநர்களும் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளையும் யோசனையையும் முன்வைத்தனர். 

கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "இந்தியப் பொருளாதாரம் தற்போது 7.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனை இரட்டை இலக்க வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தற்போதைய சவால். அதற்கு பல முக்கியமான நவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. 

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தளமாக, நிதி ஆயோக்கின் ஆட்சிக் குழு செயல்பட்டு வருவதாக மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.  தற்போது நிலவும் சிக்கலான பிரச்னைகளை டீம் இந்தியா (Team India) என்ற செயல்முறையுடன் நிதி ஆயோக் அணுகி வருகிறது. 

மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, ஆரோக்கியமான போட்டி, கூட்டாட்சி தத்துவம் ஆகிய உணர்வை மேம்படுத்துவதில் நிதி ஆயோக் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய உதவிகளை வழங்கும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் கிடைக்கும். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டம், ஜன் தன்யோஜனா, ஸ்டான்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு நிதி உள்ளீடுகளைக் கொண்டுவரும். சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இந்தத் திட்டங்கள் போக்கும்.

இந்தியாவில் எந்தவிதத்திலும் திறமைக்கோ, திறனுக்கோ, வளத்துக்கோ பற்றாக்குறை இல்லை. மாநிலங்களுக்கு நிதி வழங்குவது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை ரூ.6 லட்சம் கோடி என்ற என்ற நிலையில் இப்போது மாநிலங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி தரப்படுகிறது" என பிரதமர் மோடி உறுதியளித்தார். 

ஈந்தக்பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முதலமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement:
[X] Close