ட்வீட் குழப்பங்கள்... டெல்லி ஆளுநர் பிரச்னைக்கு மன்னிப்பு கேட்ட எல்.ஜி நிறுவனம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Jun, 2018 04:42 pm

lg-in-delhi-not-working-tweets-shirish-kunder-lg-electronics-expresses-regret

டெல்லியில் ஆளும் அரசின் சர்விஸ் சரியில்லை என கூறியதற்கு எல்ஜி நிறுவனம் மன்னிப்பு கேட்டது நெட்டிசன்களுக்கு தீனியாய் அமைந்துள்ளது.

டெல்லியில் மாநில அரசில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் தனது அமைச்சர்களுடன் 6-ஆவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

துணை நிலை ஆளுனரை லெஃப்டினட் கவர்னர் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதன் சுருக்கம் எல்.ஜி. இதை வைத்து, பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் சிரிஷ் குந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எல்.ஜி (எலக்ட்ரானிக்ஸ்) நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார்.

அந்த பதிவில்,

எல்ஜி இந்தியா உங்களுக்கு டெல்லியில் சேவை மையம் உள்ளதா?

எல்.ஜி இங்கு வேலை செய்யவில்லை. மற்றவர்களையும் வேலை செய்ய விடவில்லை - என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு எல்ஜி நிறுவனமும் பதிலளித்தது தான் காமெடியில் ஹைலைட்! உங்கள் பிரச்னைக்கு வருந்துகிறோம், உங்களை தொடர்புகொள்ளும் விவரத்தைச் சொல்லுங்கள் உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என பதிலளித்துள்ளது. இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கலாய்ப்புக்குள்ளாகியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close