கோலி - அனுஷ்காவின் அநாகரீக விளம்பரம்: அர்ஹான் சிங் சாடல்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 17 Jun, 2018 10:37 pm

yelling-like-a-crazy-roadside-person-man-caught-littering-by-anushka-sharma-virat-kohli-hits-back

சாலையில் குப்பை போட்டவரை அனுஷ்கா ஷர்மா திட்டிய வீடியோ வைரல் ஆகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர் அனுஷ்காவையும் விராத் கோலியையும் சமூக வளைதளத்தில் கடுமையாக சாடியுள்ளார். 

சில தினங்களுக்கு முன், விராத் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு  மற்றொரு காரில் சென்று கொண்டு இருந்த நபர், கண்ணாடி வழியாக பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசினார். இதனைக் கண்ட அனுஷ்கா ஷர்மா அந்த நபரை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறு கூறினார். இதனை அனுஷ்கா ஷர்மாவிற்கு அருகிலிருந்த கோலி படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டார். மேலும் தனது மனைவியின் சமூக உணர்வை கோலி பாராட்டினார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள சம்மந்தப்பட்ட நபரான அர்ஹான் சிங், ’’நான் காரிலிருந்து குப்பையை வேண்டுமென்று வீசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டும் அனுஷ்கா ஷர்மாவும் கோலியும் என்னை அநாகரிகமாக திட்டி, இதனை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

நான் காரிலிருந்து வெளியே போட்ட குப்பையை விட, கோலியும், அனுஷ்காவும் என்னை திட்டி விளம்பரம் தேடிக்கொண்டது தான் படுகுப்பையான விஷயம்’’ என தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close