விமானநிலையத்தில் புகுந்த பாம்பு: துணிச்சலுடன் பிடித்த போலீசுக்கு பரிசுத்தொகை வழங்கி  டிஜிபி பாராட்டு

  சுஜாதா   | Last Modified : 18 Jun, 2018 06:05 am

poisonous-snake-causes-panic-at-puducherry-airport-s-vip-lounge

புதுச்சேரி விமானநிலையத்தில் சுற்றி திரிந்த விஷபாம்பை பிடித்த போலீஸ் காவலருக்கு புதுச்சேரி டிஜிபி பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

விமானநிலைய தலைமை அதிகாரி உள்ளிட்ட உயரதிகாரிகள், தலைவர் குருபிரசாத் மோஹபத்ரா ஆகியோர் மீட்டிங்கில் பேசி கொண்டு இருக்கும் போது,  6 அடி நீளமான பாம்பு ஒன்று ஊர்ந்துவருவதைக் கண்டனர். விஐபி லவுஞ்சில் சுற்றி திரிந்த அந்த பாம்பை  ஒரு பெண் ஊழியர் தரைதுடைக்கும் மாப்பை துடைப்பானால் தள்ளிக்கொண்டுபோய் வெளியே விட முயற்சித்தார். இருப்பினும் அது அது அருகிலுள்ள புதரிலேயே சுற்றிவந்துகொண்டிருந்தது.  புதுச்சேரி மாநிலத்தின் போலீஸ் காவலர் டி.தியாகு, அப்பாம்பை துணிச்சலாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

புதுச்சேரி காவல்துறை தலைவர் எஸ்.கே.கவுதம், தியாகுவின் துணிச்சலை பாராட்டி பரிசுத்தொகையும், , பாராட்டுச் சான்றிதழையும் தைரியமாக செயல்பட்ட போலீஸ் காவலருக்கு வழங்கி தனது அவரது துணிச்சலுக்கு பாராட்டையும் தெரிவித்தார்.  
   

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close