ஆளுநர் வீட்டில் தர்ணா: ஆம் ஆத்மி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 08:29 am
aap-minister-satyendar-jain-hospitalised

டெல்லி ஆளுநர் மாளிகையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது குடும்பத்தின் அங்கம் என்றும், அவர்கள் உடனடியாக பணியை தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக முதலமைச்சருக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close