ஒரே காதலனுக்காக 2 கல்லூரி மாணவிகள் 38 செல்போன்களை கொள்ளையடித்த சம்பவம்..நடந்தது என்ன?

  சுஜாதா   | Last Modified : 18 Jun, 2018 08:29 am
two-college-girls-steal-38-mobile-phones-for-boyfriend

மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் தங்கள் காதலருக்காக விலையுர்ந்த செல்போன்களை திருடி செலவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலில் விழும் சில இளைஞர்கள் தங்கள் காதலியை கவர்வதற்காக, அதிக செலவு செய்ய எண்ணி, பண தட்டுப்பாடு காரணமாக திருட்டு வேலை செய்வது என்பது ஆங்காங்கே நடைபெறும் சம்பவம் தான். ஆனால் தங்கள் காதலனை கவருவதற்காக பெண்கள் இருவர் இத்தகைய திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியமான ஒன்று.
         
மும்பையில்  மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் மொபைல் சாதனங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததுள்ளது. குறிப்பாக போரிவாலி - சாண்டாகுரூஸ் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இந்த திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்தது பயணிகள்  ரயில்வே அதிகாரிகளிடம் பல புகார்களை அளித்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. பெண் காவலர் ஒருவர் போரிவாலி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறினார். அப்போது டிவிங்கிள் சோனி என்ற 20 வயது கல்லூரி மாணவியை பெண் காவலர் கையும் களவுமாக பிடித்தார். இருந்து 9 விலையுயர்ந்த செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரைப் போலவே செல்போன்களை திருடிய டீனா பர்மர் என்ற 19 வயது கல்லூரி மாணவியும் சிக்கினார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இரண்டு கல்லூரி மாணவிகளும் திருடிய செல்போன்களை ராகுல் ராஜ்புரோகித் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்ததைத் தொடர்ந்து ராகுலையும் போலீசார் கைது செய்தனர். இரு மாணவிகளிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் கூறியது:   கல்லூரிக்கு மின்சார ரயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் சென்று வரும் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், பின்னர் இருவருமே ஹிருஷி சிங் என்ற வாலிபரை காதலித்து வந்ததும், இவருக்காகவே தாங்கள் செல்போன்களை திருடியதாகவும், திருடிய செல்போன்கள் மூலம் கிடைத்த பணத்தை காதலருக்கு அளித்து வந்ததாகவும் கூறியுள்ளனர். 

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவிகளில் ஒருவர்  கட்டிடக்கலை துறையை சேர்ந்தவர், டீனா என்பவர் முதலாம் ஆண்டு கலைக் கல்லூரி மாணவி  என்பது குறிப்பிடத்தக்கது.     

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close