நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 10:14 am
nationwide-strike-by-lorry-owners-from-today

மத்திய அரசு பேச்சுவார்ததைக்கு அழைக்காததால் நாடு முழுவதும் இன்று முதல்  லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

நாடு முழுவதும் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய லாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான எரிபொருள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் லாரி ஓட்டுநர்கள் ஊதியம், சரக்குக் கட்டணம், வரி வசூல் என பல்வேறு நடவடிக்கைகளால், அடிப்படைப் பொருட்களின் விலை உயர்ந்து விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 

இந்நிலையில் டீசல் விலை நாள்தோறும் உயர்வு, 3வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் அதிகரிப்பு, சுங்கக் கட்டணம் உயர்வு போன்றவற்றிற்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

எனவே டீசல் விலை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம், சுங்கக் கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடிதம் அனுப்பியது. ஆனால் மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. 

இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் வாகனங்களும், தமிழகத்தில் 13 லட்சம் சரக்கு வாகனங்களும் இன்று இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் எனவும், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close